அடிப்படை வசதியை மேம்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 December 2022

அடிப்படை வசதியை மேம்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.


குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட, பெருமத்தூர் குடிக்காடு கிராம பொதுமக்கள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பூர் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து முன்னிலையில் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறுவதாவது, எங்கள் கிராமத்தில் குடிதண்ணீர் குழாய் அனைத்து தெருகளுக்கு பைப் லைன் வசதி அமைத்து தூய்மையான தண்ணீர் வழங்கவும், கிராம மக்களுக்கு பொது இடத்தில் ஆண்கள்/பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதி செய்து தரவேண்டியும், தெருக்களில் உள்ள மின்விளக்குகளை சீர் செய்ய வேண்டும் எனவும், தெருக்களில் சாக்கடைகள் தேங்கி கொசுக்கள் அதிகமாக இருப்பதால் டெங்கு காய்ச்சல் எங்களுக்கும், எங்களது குழந்தைகளுக்கு வருகிறது எனவும், கால்வாய்களில் அனைத்தும் சுத்தம் செய்து பீச்சிங் பவுடர் போட வேண்டும் எனவும், கால்வாய்களில் மேல்புறம் மூடி போட்டு தர வேண்டும் அதில்  குழந்தைகள், வயதானவர்கள் தவறி விழுந்து செல்கிறார்கள் எனக் கூறியும் குப்பைகள் பல இடங்களில் கொட்டுவதை தவிர்த்து தெருக்களில் குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும் எனவும், தினசரி பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்ய உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று பெருமத்தூர் குடிக்காடு கிராம மக்கள்  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 06-ஆம் தேதியான நேற்று மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad