
இந்த நிலையில் நவம்பர் 23-ஆம் தேதியான இன்று மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளையபெருமாள், குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும் வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவற்றின் மகன் அஜித் (23), மற்றும் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரின் மகன் விஜய் (20) ஆகிய இருவரையும் விசாரணை செய்ததில் மேற்படி வழக்கின் சம்பந்தப்பட்ட நபர்கள் என்பதை உறுதி செய்து மங்களமேடு காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடமிருந்த மேற்படி வழக்கின் சொத்தான இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து திருடிய நபர்கள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளையபெருமாள் அனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment