திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் இரண்டு நாள் சுற்று பயணம் - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 November 2022

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் இரண்டு நாள் சுற்று பயணம்


தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் பெரம்பலூர், அரியலூர்  மாவட்டங்களில் நாளை (நவ.28) முதல் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

இதற்காக நாளை காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 10.15 மணிக்கு திருச்சியை அடுத்த காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு அங்கு செல்கிறார். ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்' என்ற பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார் . இதையடுத்து, காட்டூரிலிருந்து சாலை மார்க்கமாக பெரம்பலூர் மாவட்டம், எல்லை பகுதியான பாடாலூரில் பெரம்பலூர் - அரியலூர் மாவட்டம் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு எசனைக்குச் செல்லும் முதல்வர், அங்கு கோத்தாரி சர்க்கரை ஆலையின் புதிய அலகுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 


பின்னர், வேப்பந்தட்டை தாலுகா, நரி ஓடை காலனி அருகே உள்ள எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்கிறார்.


பின்னர் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும், இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மாலை 5.45 மணி வரை பார்வையிடுகிறார் . அதன்பிறகு அரியலூர் அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.  


வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு அரியலூர் கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள விழாவில், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகிறார். 


அத்துடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடக்கியும் வைக்கிறார். பின்னர் , திருச்சிக்கு காரில் வரும் முதல்வர் பிற்பகல் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். 


- பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் திரிசங்குராஜன்.


முதல்வர் சுற்றுப்பயணம் மற்றும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வரின் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad