பெரம்பலூர் மாவட்ட கலை மன்றம் வாயிலாக மாவட்ட அளவில் கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது. - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 7 April 2023

பெரம்பலூர் மாவட்ட கலை மன்றம் வாயிலாக மாவட்ட அளவில் கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூர் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக மாவட்ட அளவில் 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்  க. கற்பகம் அவர்கள் பொன்னாடை அணிவித்து பட்டயம் மற்றும் பொற்கிழி ஆகியவற்றி வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 18 வயதும் அதற்குட்பட்ட வயது பிரிவில் செல்வி ஹாசினி, செல்வன் கவின், செல்விரஜிடா ரிஜு ,ஆகியோர் கலை வளர்மணி விருதும், 19 வயது முதல் 35 வயது வரையிலான வயதுப் பிரிவில் கோபி, இளவழகன்,  செல்வம் ஆகியோர் கலை வளர்மணி விருதும், 36 வயது முதல் 50 வயது வரையிலான வயதுப்பிரிவில் மாரிகேசன். அழகுதுரை, சாரதாம்பாள். ஆகியோர் கலைச் சுடர்மணி விருதும். 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட வயதுப் பிரிவில் பூமாலை, முருகேசன். .துரைசாமி ஆகியோர் கலை நன்மணி விருதும், 58 வயதிற்கும்மேற்பட்ட கலைஞர்களுக்கு ராஜப்பா,  ஜெயராமன், தங்கராஜ் ஆகியோர் கலை முதுமணி விருதும் வழங்கினார்கள்.  அருகில் திருச்சிராப்பள்ளி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் சி .நீலமேகன் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad