பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி அறிவிப்பு : சாதி ரீதியிலான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 January 2023

பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி அறிவிப்பு : சாதி ரீதியிலான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த மணியை சென்னை தாம்பரம் போலீஸ் தலைமையகம் மற்றும் நிர்வாகம் துணை கமிஷனராகவும், சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஷியாம்ளா தேவியை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதனை தொடர்ந்து ஷியாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அவரிடம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய மணி பொறுப்புகளை ஒப்படைத்து சென்றார். இதையடுத்து ஷியாம்ளா தேவி தனது அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவருக்கு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஷியாம்ளா தேவி செய்தியாளர்களிடம் பேசிய போது, "நான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றியதால், பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதற்கு பாடுபடுவேன்" மேலும், "சாலை விபத்தில்லா மாவட்டமாகவும், சமூக விரோதிகள் இல்லாத மாவட்டமாகவும் பெரம்பலூரை உருவாக்குவதற்கும் நான் என்னுடைய காவல் துறையினருடன் மட்டுமல்லாமல், மற்ற துறை அலுவலர்களுடன் இணைந்து பாடுபடுவேன். 


மேலும் மாவட்டத்தில் சாதி ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்க போலீஸ் அலுவலகத்தை 100 என்ற இலவச தொலைபேசி எண்ணையும், 9498100690 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்களை பற்றிய விவரம் ரகசியம் காக்கப்படும்" என தெரிவித்தார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட  செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.... 

No comments:

Post a Comment

Post Top Ad