அரசாங்கத்திலிருந்து இதுவரை தங்கள் பகுதிக்கு பட்டா எதுவும் எங்களுக்கு தரவில்லை எனவும், அரசாங்கம் கட்டி தந்த வீட்டில் பூச்சிக்கலை எடுத்து உதிர்ந்து வரும் நிலையில் உறங்கும் போதும், சாப்பிடும் போதும் பூச்சி உதிர்ந்த நிலையில் கொட்டுவதால் சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை என நரி ஓடை நரிக்குறவர்கள் மக்கள் கூறியுள்ளனர்.
மழைக்காலங்கள் தொடங்கி வருவதால் வீடுகளில் தண்ணீர் ஒழுகியும், பல இடங்களில் மழைதண்ணீர் தேங்கி கொசுக்கள் தொல்லைகள் அதிகமாகி டெங்கு காய்ச்சலை உருவாக்குவது எனவும் கூறினார்.
எங்களது குழந்தைகளுக்கு கல்வி பயில நடவடிக்கை எடுத்து தர வேண்டும் எனவும் கூறினர், பின்னர் ஊராட்சி நிர்வாகத்திற்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு அதிகாரிகள், அரசியல்வாதிகள் நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்
இதன் பிறகும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரி ஓடை கிராம மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment