பெரம்பலூர் மாவட்ட அரசுத்தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுனன் தெரிவித்ததாவது : பெரம்பலூர்அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து அவசர ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மெடிக்கல் சப்ளைஸ் கார்ப்பரேசன் மூலம் பெறப்பட்ட 3ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட கொள்கலன் ஒன்றும், ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட கொள்கலன் ஒன்றும் பாதுகாப்பு வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.
கொள்கலனில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் அலாரம் அடிக்கும் திறன் கொண்டது. ஆக்ஸிஜன் இருப்பை அவ்வப்போது துல்லியமாகக் கண்டறியவும் முடியும். இந்த இரண்டு கொள்கலன்களும் மருத்துவ மனையில் உள்ள தாய் திட்ட அவசர சிகிச்சைப்பிரிவு மையம், ஒருங்கிணைந்த புற மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் தீவிர குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றிலுள்ள மொத்தம் 240 படுக்கைகளுடன் படுக்கைகளுடன். இணைக்கப்பட்டு வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் ஆக்சிஸன் பெறும் வசதியுடன் உள்ளது.
இந்த 2 கொள்கலன்களில் திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போகும் முன்பாக, தஞ்சையிலிருந்து திரவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது. இவை தவிர அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 3 அறைகளில் தலா 20லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்ளளவுளவு கொண்ட, முழுவதும் நிரப்பப்பட்டுள்ள 110 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கைவசம் தயார் நிலையில் உள்ளது.
அதனால் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் முன்பாக நம்பிக் கையுடன் அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் என தெரிவித்தார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.
No comments:
Post a Comment