பெரம்பலூர் அருகே வீட்டிற்குள் நுழைந்த பாம்பு; அலறியடித்து ஓடிய குடும்பத்தினர். - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 30 December 2022

பெரம்பலூர் அருகே வீட்டிற்குள் நுழைந்த பாம்பு; அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்.


பெரம்பலூர் - வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் சத்தியகாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த சத்திய காந்தாவின் குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீளமுடைய பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களில் பாம்புகள் அதிகம் வீட்டுக்குள் வருவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


-தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.... 

No comments:

Post a Comment

Post Top Ad