பெரம்பலூரில் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் இரண்டு பெண் வழக்கறிஞர்களுடன் பாஜகவினர் கடும் வாக்குவாதம் செய்து, முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 28 December 2022

பெரம்பலூரில் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் இரண்டு பெண் வழக்கறிஞர்களுடன் பாஜகவினர் கடும் வாக்குவாதம் செய்து, முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.10.72 லட்சம் கோடி கடனை வசூல் செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும் எனவும், டாஸ்மாக், மது உட்பட அனைத்து போதை பொருட்களையும் தடை செய்ய வேண்டும் என்றும்; பரப்புரை இயக்கம் என்ற தலைப்பில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு ரூ.2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்ததை, ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றாமல் மாறாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

மேலும் சிறு தொழில் செய்யும் சாமானிய மக்கள் வாங்கும் கடனுக்கு, வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாராக்கடன் என்று பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளது என்பன உள்ளிட்ட மோடியின் திட்டத்தை எதிர்த்து குறிப்பிடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை மதுரை K.புதூர், காந்திகிராமம், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நந்தினி, நிரஞ்சனா ஆகிய இரண்டு பேரும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகியப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனம், சிறு கடைகள், பேருந்து பயணிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் விநியோகம் செய்து வந்துள்ளனர்.


இதனால் அங்கிருந்த பழக்கடை முன்பு, இரண்டு பெண் வழக்கறிஞர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இதன் மறுபக்கமாக இரண்டு பெண் வழக்கறிஞர்களையும் கண்டித்து அவர்களுக்கு எதிராக அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மற்றும் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பெண் போலீசார் உதவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் வழக்கறிஞர்களையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தின் மூலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் சற்று நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.

No comments:

Post a Comment

Post Top Ad