பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்த துறைமங்கலம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கோர விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் 30க்கும் மேற்பட்டோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிய வந்துள்ளது. இந்த கோர விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.
No comments:
Post a Comment