
இவற்றை நம்பியே எறையூரில் பொதுத்துறை சர்க்கரை ஆலையும், உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலையும் இயங்கி வருகின்றன.இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தலா 30 கிலோ எடை கொண்ட சிப்பமாக பேக் கிங் செய்து, நாமக்கல் மா வட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிகல்பாளையம் விவசாய விற்பனைச் சந்தைக்கும், பழனி அருகே நெய்க்காரப்பட்டி சந்தைக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இவைத் தவிர பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்க ளிலுள்ள பிரபலமான மளிகை கடைகளுக்கும் சில்ல றையாக விற்பனை செய்கின்றனர்.
ரசாயணப் பொருட்களைக் கலந்து தயாரிக்கும் சர்க்க ரையைவிட, அதிகக் கெடு தல்இல்லாத வெல்லத்தின் அருமை இப்போது மக்களுக்கே புரிந்துவரும் சூழலில், இதுபோன்ற தரமான வெல்லத்தை அரசே கொள்முதல் செய்து, ரேசன் கடை, கூட்டுறவு அமராவதி விற்பனை அங்காடிகளில் விற்பனை செய்தால், பொதுமக்கள் முழுமையாகப் பயன் பெறமுடியும்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.
No comments:
Post a Comment