பெரம்பலூர் : வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம்.! - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 January 2023

பெரம்பலூர் : வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் காயம்.!


பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார்(41). இவரது மனைவி காமாட்சி. இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கும் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் செந்தில்குமார் அவரது மனைவி மற்றும் அரசலூரை சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேரும் நேற்று வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளது.


இதில் நான்கு பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்....

No comments:

Post a Comment

Post Top Ad