லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர். - தமிழக குரல் - பெரம்பலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 5 January 2023

லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர் சிவசங்கர் லிப்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்றபோது திடீரென லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது. இதன் காரணமாக அமைச்சர் சிவசங்கர் 15 நிமிடங்கள் லிப்டில் மாட்டிக் கொண்டார். 


கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுபிரமணியம் லிப்ட்டில் மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பெரம்பலூர் மாவட்ட  செய்தியாளர் ஆஸ்கர் மணிவண்ணன்.

No comments:

Post a Comment

Post Top Ad